சிங்கப்பூர் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!! உள்துறை அமைச்சகம் எடுத்த அதிரடி..!!
சிங்கப்பூரில் பெரும்பாலான தமிழ் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அந்நாட்டில் பெண்களுக்கென பாதுகாப்பு உண்டு. பெண்களுக்கு எதிராக ஏரேனும் செயல்பட்டாலோ அல்லது பெண்களிடம் அத்துமீறினாலோ அவர்களை உடனே சிறையில் அடைப்பது வழக்கம்.
இந்நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிகின்ற இலங்கை பணிப்பெண்கள் ஏமாற்றப்படுவதாக சிங்கப்பூர் நாட்டின் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதவாது கடந்த ஆண்டு வரை இலங்கையில் இருந்து சிங்கப்பூர் சென்ற பெண்களுக்கு அங்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.
சென்ற பின் அங்கு அவர்களை ஏமாற்றி பண மோசடியில் சிக்கவைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ள அறிக்கையில், 2022 இல் பதிவான 423 மோசடிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 18 சதவீகிதம் அதிகரிக்கும் என்றும் சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீட்டுப் பணியாளர்கள் இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைசேர்ந்த பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
எனவே சிங்கப்பூரில் பணிபுரியும் பெண்களுக்கு ஊழல் எதிர்ப்பு கல்வி தொடர்பான அறிவூட்டல்கள், தொடர்ந்து வலுவூட்டப்பட்டு வருகிறது. மனிதவள அமைச்சகத்தின் கட்டாய தீர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தொழிலாளர்கள் பின்பற்றக்கூடிய நடவடிக்கைகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
2023ஆம் ஆண்டிற்கான வருடாந்த மோசடி புள்ளிவிபரங்களின் படி அதிகபட்சமாக 46,563 மோசடிகள் பதிவாகியுள்ளன என கே.சண்முகம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சிங்கப்பூரில் வேலை செய்யும் பணி பெண்களுக்கு எந்த விதமான அபாயம் நேர்ந்தாலும் சிங்கப்பூர் அமைச்சகத்திடம் தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..