ADVERTISEMENT
இந்த வெயிலில் சன்ஸ்கிரீன் விற்பனை படுஜோர்..! சருமத்திற்கு மிக முக்கியமானது..!
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக்கதிரில் இருந்து நம்முடைய முகத்தை பாதுகாக்க பயன்படுத்தும் கிரீமாகும்.
இது நம்முடைய முகத்தை வெயிலில் இருந்தும் சரும புற்றுநோயில் இருந்தும் பாதுகாக்கும். சன்ஸ்கிரீன்கள் ஜெல், லோஷன், கிரீம் போன்ற ட்டைப்பில் கடைகளில் இருந்து கிடைக்கிறது.
சன் ஸ்கிரீன் போடாமல் அப்படியே நாம் வெளியே சென்றால் நம் சருமத்தில் சுருக்கம், கரும்புள்ளி, பிக்மென்டேஷன் போன்றவை வர வாய்ப்பு அதிகம். எனவே சன்ஸ்கிரீன் நம்முடைய சருமத்திற்கு மிகவும் அவசியமாகும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு முன் நாம் சன்ஸ்கிரீன் போட்டுக்கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும்.
சன்ஸ்கிரீன் வாங்குவதற்கு முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை SPF (சன் புரோட்டக்ஷன் பேக்டர்).
SPF 50 உள்ள சன்ஸ்கிரீன் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
சன்ஸ்கிரீன் நன்மைகள்:
-
சூரிய புறஊதா கதிரில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
-
சருமத்தில் வரும் புற்றுநோயைத் தடுக்கிறது.
-
வெயில் சருமத்தில் ஊடுறுவதைத் தடுக்கும், சருமம் வயதாகாமல் இருக்கும். மெலஸ்மாவை தடுக்கும்.
-
சூரிய புள்ளிகளை தடுக்கும். சருமைத்தை பேணிக்காக்கும். ஈரப்பதமாகவும், சருமத்தில் ஹைப்பர் பிக்மென்டேஷன் குறைக்கிறது.
-
சன்ஸ்கிரீனை இருபாலருமே(ஆண், பெண்) உபயோகிக்கலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.