இவர் ராணியின் ராஜாவா..? அல்லது காதல் மன்னனா..?
பகவதி படத்தின் மூலம் அறிமுகமாகி சுப்பிரமணியபுரம் சென்று அங்குள்ள நண்பர்களுடன் எங்கேயும் எப்போதும் கோவா சுற்றி கொண்டு அங்கே ஒரு பெண்ணின் மீது தீராத காதல் வைத்து இன்று ராணியின் ராஜாவாக இருக்கும் நடிகர் “ஜெய்” அவர்களுக்கு மதிமுகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஆறுமாதம் காத்திருந்து காதலியிடம் பதில் கேட்க வந்த காதலன், அந்த பதிலை பாடலாக பாடி கதலி சொல்லுகிறாள் .நவீன சரஸ்வதி சபதம் படத்தில் இசை அமைப்பாளர் பிரேம் குமார் மற்றும் பாடகர்கள் அபய் ஜோத்புர்கர் மற்றும் சின்மய் இணைந்து பாடிய பாடல் .
காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்.. மழையாய் பொழிகிறதே
எங்கிருந்து இவளோ அழகா வந்தாயோ ,உன்னால் நானும் மேலை பறக்கிறேன் .உலகளாகி என்று சொல்லிக்கொண்டு யாரு வந்தாலும் அவர்களை ஊரைவிட்டு போக சொல்லுவேன் என்று வடகறி படத்தில் இசையமைப்பாளா்கள் விவேக், மேர்வின் இயக்கத்தில் பாடகா்கள் விஜய் பிரகாஷ், திவாகர், அஜீஸ் அசோக் இணைந்து பாடிய பாடல் .
அவள ஊர விட்டு ஓடச் சொல்லுவேன்….
மனம் எல்லாம் துள்ளிக்கொண்டு காவேரி நதிபோல் ஓடுகிறது ஏன் என்றால் உன்னை நான் கல்யாணம் பண்ண போகிறேன் என்ற சந்தோஷத்தில் ,சென்னை பார்ட் 2 ல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் ஹரிச்சரன், சின்மயி இருவரும் சேர்ந்து பாடிய பாடல்
மனமெல்லாம் துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி விழியெல்லாம்.. வண்ணம் பூசி விளையாடிடுதே…
காதல் வந்ததும் காய்ச்சல் வந்திட்டது எனக்கு நான் மீண்டும் சரியாக எனக்கு முத்தங்கள் தருவாயா ராஜா ராணி படத்தில் இசையமைப்பாளா் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடகா்கள் அல்போன்ஸ் ஜோசப், கிளின்டன் செரேஜோ, ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்து பாடிய பாடல் .
காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி.,
மீண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும் கிரங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா…
என் மனதிற்குள் விதையை வந்து விழுந்தாய் ஆனால் இப்போது மரமாக மாறிவிட்டாய் எங்கையும் எப்போதும் படத்தில் இசையமைப்பாளா் சி. சத்யா இசையில் சின்மயி, சத்யா இணைந்து பாடிய பாடல் .
நீ ஒருநாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய்
கண்ணுக்குள்ளே விழிப்பாா்க்கும் போதே
மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே….
நம்ப காதல் மன்னன் நண்பர்களுடன் சேர்ந்து கோவா சென்ற போது அங்கே ஒரு பெண்ணை காதலித்தார்…, ஆனால் அந்த காதலில் முதல் முதலில் ஏற்பட்ட வலியை இப்படி கூட சொல்லலாம்.
காதல் என்றால் அத்தனையும் கனவு..,
பெண்கள் என்றால் ஆண் கொள்ளும் நோயானதே..
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..