ADVERTISEMENT
கொரிய மக்கள் பின்பற்றும் முறை…!! அசத்தலான டிப்ஸ்…
கொரிய மக்கள் பெரும்பானோர் இளமையான சருமத்தில், பொலிவான அழகுடனும் எப்படி இருக்கிறார்கள் என எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?
அந்த பொலிவிற்கு அவர்களது மரபியல் மட்டுமில்லாமல், கொரியர்கள் பின்பற்றி வரும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் தான் காரணமாக அமைகிறது. அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க…
1. சரும பராமரிப்பு:
கொரியர்கள் காலையில் முதலில் எழுந்ததும் சருமத்தை சுத்தம் செய்துவிட்டு ஈரப்பதமாக வைத்திருப்பதை தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்கள். அதற்காக பயன்படும் அழகு சாதனப்பொருட்களையும் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் முக்கியமாக இந்த அழகுசாதனப் பொருட்களில் ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் தாயாராகும் பொருட்களையே உபயோகிக்கிறார்கள்.
இவர்கள் தொடர்ந்து இடைவிடாமல் பின்பற்றும் இப்பழக்கம் தான் இவர்களை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்க உதவுகிறது.
2. சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்:
சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் இவர்கள் சருமத்தை பாதிக்காத வண்ணம் அவற்றைத் தடுக்க சன்ஸ்கிரீன் கட்டாயம் உபயோகிக்கிறார்கள். வெயில் நாட்களில் மட்டுமில்லாமல் குளிர்காலங்களில் கூட சன்ஸ்கிரீனை பயன்படுத்துகிறார்கள்.இது இவர்களின் சருமத்தில் சுருக்கங்களை வரவிடாமல் இளமையாக வைத்திருக்கிறது.
3. புளிப்பு வகை உணவு:
உடலுக்கு பொலிவு தரும் புரோபயோட்டின் அதிகம் நிறைந்த கிம்ச்சி, கோச்சுஜாங் போன்ற புளிப்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள்.
4. நீர் அருந்துதல்:
தண்ணீர் அதிகம் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியே தள்ளும், உடலை ஈரப்பதமாகவும் வைத்திருக்கும், எனவே இவர்கள் உடலை ஈரப்பதமாக வைத்திருக்க குறிப்பிட்ட நேரத்திற்கு இடையில் தவறாமல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள்.
5. தூக்கம்:
உடலை ஆரோக்கியமாகவும் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்க தூக்கம் மிக முக்கியமானது. இதை அறிந்த் கொரிய மக்கள் இரவில் நேரத்தை வீணடிக்காமல் தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.
6. விறுவிறுப்பான நடைப்பயிற்சி:
கொரியர்களின் உடற்பயிற்சியில் மிக முக்கியமாக அவர்கள் செய்வது விறுவிறுப்பான நடைப்பயிற்சி. கொரியர்கள் அவர்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.
7. மன அழுத்தம்:
மன அழுத்தம் ஒருவருக்கு இருந்தால் கூட அது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள். எனவே மனஅழுத்தத்தை விரட்டியடிக்கிறார்கள்.
8. உணவு வழக்கம்:
கொரியர்கள் உணவை அவசரமாக பக்கு பக்கென உண்ண மாட்டார்கள், மாற்றாக உணவை நன்கு ரசித்து ருசித்து மெதுவாக மென்று சாப்பிடுவார்கள்.
இது உடலின் செரிமான மணடலத்தை சீராக வைக்கிறது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.