தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய மையங்கள் அமைப்பது குறித்த பரிந்துரைகளை வரும் 27ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசு பள்ளி மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பயணித்து தேர்வு எழுதும் நிலை இருக்க கூடாது எனவும் கூறியுள்ளது. இது தவிர 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் போது, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மையம் அங்கீகாரம் கிடையாது எனவும் முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.