ரோடு ஷோ நடத்தினாலும் ஓட்டு நோட்டாவிற்கு..!! கனிமொழி கார் சோதனை..!!
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி வேம்பாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கனிமொழி, இந்த தேர்தல் 2வது சுதந்திர போர் நடைபெறுகிறது.
வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் செய்த கொடுமைகள் பற்றி நமது தாத்தா பாட்டி பார்த்து இருப்பார்கள், அதாவது வெள்ளையர்கள் நமது உரிமைகளை பறித்து நம் பொருட்களை அவர்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அதனை எதிர்த்து யாராவது கேள்வி கேட்டால் அவர்களை சிறையில் அடைத்தனர். அதை தான் இப்போ பாஜக ஆட்சியில் நடக்கிறது.
ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் நம்ம நிதியை ஒன்றிய அரசு எடுத்துச் செல்கின்றனர்.பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி தருகின்றனர். நமக்கு குறைவான நிதி தருகின்றனர். மழை வெள்ளத்தின் போது கேட்ட நிவாரணம் வழங்கவில்லை இன்றைக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி முதல்வர் நீதிமன்றம் சென்றுள்ளார்.
பத்திரிகையாளர்களை பாஜக அண்ணாமலை மிரட்டி வேலை செய்யவிடாமல் தடுக்கிறார்.. பாஜகவை எதிர்த்து யாரவது கேள்வி கேட்டால் அவர்கள் மீது வழக்கு தொடர்வது, அவர்கள் வீட்டுக்கு ஐடி ரெய்டு நடத்தி சிறையில் அடைப்பது மேலும் கைப்பற்றிய சொத்துக்களுக்கு ஆவணம் இருந்தாலும் விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைத்து சித்திரவாதை செய்து. ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்வது. என அவர்கள் செய்த பட்டியலை அடுக்கி கொண்டே போகலாம்.
அப்படி அவர்கள் செய்த செயலை எதிர்த்து கேள்வி கேட்ட 2 முதல்வர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
நாடு முழுவதும் விவசாயிகள் கடனை கட்ட முடியாமல் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி கடனும் ரத்து செய்யப்படவில்லை. விவசாய பொருட்களுக்கு ஆதர விலை தரவில்லை. ஏழை எளிய மக்களின் வங்கி கணக்கில் பணம் குறைவாக இருப்பதாக 21 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து ஒவ்வொருவர் வயிற்றிலும் அடிக்கும் ஆட்சி தான் பாஜக ஆட்சி.
மழை வெள்ளத்தினால் தமிழக மக்கள் தத்தளித்த போது, அவர்களை காண வராத பிரதமர் நரேந்திர மோடி இன்றைக்கு ரோடு ஷோ நடத்துவது ஏன்..? நாங்கள் தமிழகத்திற்கு இத்தனை திட்டங்கள் செய்துள்ளோம் என பட்டியல் போட்டு காட்டவா..? தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழகத்திற்கு வந்து இப்படி வேஷம் போட்டாலும் ஓட்டு என்னவோ திமுகவிற்கு தான்.
பாஜகவுடன் போட்டியிட்ட நோட்டாவே வெற்றி பெற்றது. இதுதான் மக்கள் பாஜகவை பற்றி புரிந்து கொண்டிருப்பது.., இதுவரை நடந்த தேர்தலில் மட்டுமல்ல. இனி வரும் தேர்தலிலும் அப்படி தான்.., மோடியுடன் போட்டியிட்டால் பாஜகவே ஜெயித்துவிடும்.
ஹிந்தி படிக்க சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் கற்றுக் கொள்ள முதல்வரிடம் சொல்லி தமிழ் ஆசிரியரை நியமிக்க சொல்வோம் என்றார்.., அப்போது அங்கிருந்த ஒருவர் அண்ணாமலையை போதும் என சொல்கிறார்.., இது தமிழ் பாடம் கற்றுக்கொள்ள அல்ல., தமிழ் நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்க.
இதற்கு பதில் அளித்து அண்ணாமலை நான் தமிழன் இல்லை கன்னடர் என சொல்லுகிறார்.. அண்ணாமலை சொல்லிக்கொடுக்கும் திருக்குறளுக்கு அவருக்கு அர்த்தம் கூட தெரியாது. ஆனால் இந்த சூழலில் பிரதமர் மோடிக்கு அண்ணாமலை திருக்குறள் சொல்லி கொடுத்தால் அதன் நிலை என்னவென்று தெரிகின்றது.
தமிழ் மொழி செம்மையான, தொன்மையான மொழி என்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும்.. தமிழை பற்றி பெருமையாக பேசும் பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதம் வளர்ச்சிக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
நம் கலைஞர் கொண்டு வந்த “செம்மொழியான தமிழ்மொழி” என கொண்டு வந்த திட்டத்தையே அவர்கள் உடைக்க பார்க்கிறார்கள்.
தூத்துக்குடியில் என்றாலே என் இரண்டாவது தாய்வீடு என பாஜகவிற்கு தெரிந்ததால்.., பாஜகவிற்கு ஓட்டு விழாது என்பதால் இங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை என்றார்.
அதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கடைசி நிகழ்ச்சியாக வேம்பாரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.., எனவே மக்கள் கூட்டம் கலைந்து போகாமல் இருக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு க ஸ்டாலின் வேடங்களில் கலைஞர்கள் தோன்றினார். மேலும் ஓடி வருகிறார் என்று தொடங்கிய திமுக கட்சி பாடல்கள் முதல் காவலா என திரைப்பட பாடல்கள் என குத்தாட்ட கலை நிகழ்ச்சியும் களைகட்டியது.
ராமநாதபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கனிமொழி வேம்பாருக்குள் வந்து கொண்டிருந்த போது அவர் அப்பகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய எடுத்துக்கொண்டு போவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே தகவலின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.., ஆனால் அவரின் காரிலோ உடன் வந்த வேட்பளார்கள் மற்றும் உறுப்பினர்கள் காரில் எந்த நகையும் பணமும் இல்லாததால் அவர்கள் கனிமொழியிடம் மன்னிப்பு கேட்டனர்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள், கேள்வி எழுப்பியுள்ளனர்., அதற்கு அவர். இது அதிகாரிகளது கடமை.., அவர்களது கடமையை அவர்கள் செய்யும் போது, நாம் தடுக்க கூடாது. நான் தப்பு செய்திருந்தாள் நான் பயன்படலாம்.., நான் என்ன மற்றவர்களை போலவா..? 4 கோடி 5 கோடி என காரிலும் இரயிலில் எடுத்து சென்றாவது வாக்கு வாங்க. மக்களுக்கு திமுக ஆட்சிமீது இருக்கும் அன்புக்கு நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம். என தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..