அத்து மீறிய பாஜக நிர்வாகி..!! பாதிக்கப்பட்ட பெண்..!! ஆத்திரமான திருப்பூர் மக்கள்..!!
ஜிஎஸ்டி வரியால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறிய பெண்ணை, பாஜக நிர்வாகி அவரின் தொண்டர்களுடன் சென்று பெண்ணை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் :
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.., வாக்கு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.., ஒரு சிலர் மக்களின் மக்களாக கலந்து அவர்களின் வேலைகளை செய்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், நேற்று இரவு ஆத்துப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அப்பகுதியில் உள்ள வீதிவழியே சென்று வாக்கு சேகரித்துள்ளார்.
அப்போது ரெடிமேட் கடை நடத்தி வரும் பெண் ஒருவர் “ஜிஎஸ்டி வரியால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்”. மேலும் அவர்கள் எதுவும் பேசாமல் திகைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என கூச்சலிடவே.., கடுப்பான பாஜக தொண்டர்கள், சங்கீதா என்ற அந்தப் பெண்ணின் கடைக்குள் நுழைந்து, அநாகரிகமான வார்த்தைகளால் பேசிய தோடு, அப்பெண்ணைத் தாக்கி கடைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவரை அசிங்கமாக பேசி பாஜகவினர் தாக்க முற்படும் காட்சிகளை வீடியோவாக எடுத்து அப்பகுதி மக்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த அத்துமீறலை தட்டி கேட்ட அந்த பகுதி மக்களையும் பாஜகவினர் தாக்க முயன்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து அந்த பெண்.., அத்துமீறி கடைக்குள் புகுந்து தாக்கிய பாஜக நிர்வாகி சின்னச்சாமி என்பவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேள்வி கேட்ட பெண்ணை பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..