ஆப்பிள் வாங்கும் போது இதை பார்க்க மறக்காதீங்க..!!
நாம் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதற்கு ( Experiy Date ) பார்த்து வாங்குவது வழக்கம்.., நாம் பயன் படுத்தும் பொருள்களுக்கு அந்த அளவிற்கு தரம் பார்க்கிறோம் என்றால் நாம் சாப்பிடும் உணவு பொருளுக்கு எந்த அளவிற்கு நாம் தரம் பார்த்து வாங்க வேண்டும்.
இன்றைய பதிவில் நாம் எந்த ஆப்பிளை பார்த்து வாங்க வேண்டும் என்று பார்க்கலாம்.. இயல்பாகவே , பழங்களில் இயற்கையான, மரபணு செலுத்தப்பட்டது என நமக்கு தெரியும். பழ கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிற்கும் ஆப்பிள் தரமானவை என நாம் நினைத்திருப்போம்.
நீங்கள் நினைத்தது சரிதான் ஆனால் எல்லாம் ஆப்பிள்களிலும் அதே ஸ்டிக்கர் ஒட்டப்படுவதில்லை மேலும் ஒவ்வொரு ஸ்டிக்கருக்கு பின்னும் ஒவ்வொரு கதை உள்ளது. இன்னும் சிலர் ஸ்டிக்கர்கள் இருந்தால் மெழுகு பூசபட்டிருக்கும் என நினைப்பார்கள் என நினைத்து கொண்டிருப்பார்கள்
பொதுவாகவே பழங்களில் இருக்கும் ஸ்டிக்கர்கல் குறிப்பிடப்பட்டு இருக்கும் எண்களை கொண்டு இயற்கையாக விளைந்ததா அல்லது செயற்கை முறையில் ரசாயன மருந்துகள் செலுத்தப்பட்டு மாற்றபட்டவையா என உங்களின் மனதில் இருக்கும் சந்தேகங்களுக்கு பதில் இதோ…
4011 என ( 4 டிஜிட்டல் ) 4 என்ற எண்ணில் இருந்து ஆரம்பித்தால்.., ரசாயனம் மருந்து தெளிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பழம் என அர்த்தம்.
84011 ( 5 டிஜிட்டல் ) 8 என்ற எண்ணில் தொடங்கினால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவை.
94131 ( 5 டிஜிட்டல் ) 9 என்ற எண்ணில் இருந்து ஆரம்பித்தால் இயற்கையான முறையில் ரசாயனம் கலக்காமல் வளர்க்கப்பட்ட பழம். இதனை ஆறு மாத குழந்தைகள் முதல் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என அனைவருக்கும் கொடுக்கலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..