விசாரணைக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு..!! டெல்லி நீதிமன்றம் உத்தரவு..?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீடித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறையின் காவலை எதிர்த்து இடைக்கால நிவாரணம் கோரி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததை சட்ட விரோதம் எனக் கூற முடியாது என கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்கக் கோரி உத்தரவிட்டனர். இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டர்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீதிபதி நீடித்து உத்தரவிட்டார்.
அதேபோல், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகள் மற்றும் எம்எல்சி கவிதாவின் நீதிமன்ற காவலும் ஏப்ரல் 23ஆம் தேதி நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..