அந்த பொண்ண பார்த்து தான் இன்னைக்கு இந்த பொண்ணுங்களும்..!!
7G வீட்டுல இருந்த பொண்ணு அத பாத்து இப்போ நிறைய பொண்ணுங்க கெட்டு போய்ட்டாங்க பா, அட என்னங்க சொல்லுறீங்க..? இது எப்போ நடந்துச்சிங்க, சினிமாவிற்கும் நிஜவாழ்க்கைக்கு ஒரேயொரு வித்தியாசம் தாங்க.
அது என்னனு கேக்குறீங்களா..? வேரா ஒன்னு பெருசாயில்லங்க சினிமாவில் இரண்டு மணி நேரம் நடிச்சி காமிச்சிட்டு போயிடுறாங்க. ஆனா இந்த பாழாப்போன மனுச பயலுக அத நிஜவாழ்க்கையில நடத்திட்டு இருப்பாங்க.
அதுல முக்கியமான ஒண்ணுன்னா உடை அணிவதை சொல்லலாம். அந்த காலத்து நடிகைகள் எல்லாம் புடவை அணிந்து நடிப்பார்கள் அது பார்த்து புடவை வாங்கி அணிபவர்கள் இருப்பார்கள்.
ஆனால் இந்த காலத்தில் உடையில் பலவித உடை அணிந்து கவர்ச்சியாகவும், கண்ணாடி வடிவிலும் உடைகளை அணிந்து திரிகிறார்கள் அதை பார்த்து இப்போ இருக்கிற இளசுகளும் அதயே பாலோவ் பன்றாங்க.. அதுனால தான் நிறைய பிரச்சனைகள் எல்லாம் வருகிறது.
இப்படி எல்லாம் உடை அணிந்து வெளிய செல்வதனால் பசங்க மனசுல தப்பான எண்ணங்கள் தோணுவது வழக்கம் தானே அவங்களும் மனுஷங்கள் தான இதுல நம்மில் பலபேரு என்ன சொல்லுறாங்க தப்பா பாக்குறவங்க தப்பா தான் நினைப்பாங்க அப்படினு சொல்லிறோம்.
ஆனா நம்ப மேல இருக்குற குறைய யாரும் சொல்லுவதில்லை நம்ம சரியான உடை அணிந்து கொள்ளுவது நமக்கு மட்டும் இல்லை மத்தவங்களுக்கு அது ஒரு நன்மையே கொடுக்கக்கூடிய ஒரு விசயமா இருக்கன்னு சொல்லலாம்.
சுடிதார் என்பது ஒழுக்கமான உடைதான் அதை மாடர்ன் என்ற பெயரில் துப்பட்டா இல்லாமல் அணிவது கழுத்துக்கு மட்டும் துப்பட்டா போடுவது என பல மாற்றங்கள் கொண்டு வந்த வங்க தான் நம்ம தமிழ் சினிமா இப்படியே போன நாடு எங்க போகப்போகுதோ தெரியல..? இனிமேல் வர சந்ததியினருக்கு முடிச்ச அளவுக்கு பாரம்பரிய உடையில் அணிவதை கத்துக்கொடுப்போம்.
–சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..