டேஸ்டியான கிரீமி கார்ன் மசாலா..!
ஸ்வீட்கார்ன் என்பதை பிடிக்காத ஆளே கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஸ்வீட்கார்ன் பிடிக்கும்.
தோசை, சப்பாத்தி, பரோட்டா, நெய் சாதம் ஆகியவற்றிற்க்கு நல்லா சூட்டாக கூடிய கிரேவி இது. அப்படி எல்லாருக்கும் விருப்பமான ஸ்வீட்கார்ன் வைத்து ஒரு கிரேவி செய்து அசத்தலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
ஸ்வீட்கார்ன் – ஒரு கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு, இஞ்சி – 50 கிராம்
ஏலக்காய், பட்டை, கிராம் – தலா 1
சீரகம் – ஒரு டீ ஸ்பூன்
குடை மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை -சிறிதளவு
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப்
மெத்தி இலைகள் – ஒரு டீ ஸ்பூன்
ADVERTISEMENT
முதலில் ஸ்வீட்கார்னை வேக வைத்து தனியாக எடுத்துகொள்ள வேண்டும்.
பின் வெங்காயம் மற்றும் குடை மிளகாய் ஆகியவற்றை சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயத்துடன் குடை மிளகாய் சேர்த்து அதுவும் வதங்கும் வரை வதக்க வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில் தக்காளி, பூண்டு, இஞ்சி, கிராம்பு எல்லாவற்றையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் இத்துடன் முந்திரி மற்றும் கொஞ்சம் ஸ்வீட்கார்ன் சேர்த்தும் அரைக்கவும்.
அரைத்து எடுத்து வைத்துள்ள விழுதை வாணலில் கொட்டி, அதோடு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
மசாலா எண்ணெய் பிரிந்து வந்ததும் , அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்க வேண்டும். பின் வேக வைத்த கார்னை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் கசூரி மேத்தி இலை மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ஸ்வீட்கார்ன் ரெசிபி ரெடி.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.