தமிழ்நாட்டின் சட்ட சபை பொதுக்கூட்டம் நேற்று கூடிய நிலையில் இன்று 2ஆம் நாள் சட்டசபை கூடியது. இதில் இ.பி.எஸ். தரப்பில் சபாநாயகருக்கு ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை ஒதுக்கிய நிலையில் இன்று சபாநாயகர் ஓ.பி.எஸ் அவர்களுக்கு எதிர் கட்சி துணை தலைவர் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கபட்டததால், இ.பி.எஸ். தரப்பில் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் பேச்சை பொருட்படுத்தாமல் அமளியில் ஈடுபப்பட இ.பி.எஸ். மற்றும் அவரது தரப்பினரை அவை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டார்கள். இக்கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான மசோதாவில் சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு தொடர்பான பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்று அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு சொந்தக்காரர்கள் நாம் இந்தி திணிப்புக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்க்கு அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்துறை செயலாளர், டிஜிபிக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பிக்கபட்டது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மரணம் குறித்தான விசாரணை விவாதிக்கப்பட்டு வருவதால் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.