இரயில் பயணம் டிக்கெட்.! இனி பயணத்தின் போதே புக்கிங்..!!
சென்னையில் புறநகர் மற்றும் பறக்கும் இரயில் சேவைகள் அதிகமாக இயங்கி வருகிறது.., காலை முதல் இரவு வரை இரயில் பயணம் செய்ய நாம் வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது..,
அதே சமயம் விரைவு இரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முன்பதிவு செய்துக்கொண்டு பயணம் செய்ய முடியும் என்ற விருப்ப முறை (ஆப்ஷன்) இருந்தது.
அதாவது அந்த முன்பதிவு கூட குறைந்தது ஒரு வாரத்திற்கு முன் இருந்தே முன் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.., ஆனால் மின்சார இரயிலில் அப்படி ஒரு விருப்ப முறை இல்லை., இந்த சிக்கலை குறைப்பதற்காக தென்னக இரயில்வே ஒரு புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது..
அதை பற்றி விரிவாக படிக்கலாம்.
யுடிஎஸ் UTS ( Unserved Ticketing System ) என்ற செயலி மூலம் நாம் டிக்கெட் புக்கிங் செய்துக்கொள்ள முடியும்..,
இந்த செயலி மூலம் நாம் வீட்டில் இருந்தோ அல்லது இரயில் நிலையத்திற்கு வரும் வழியிலோ பயணம் செய்ய முடியும்..,
இதில் மின்சார இரயில் டிக்கெட்கள் மட்டுமின்றி நடைமேடை பயணசீட்டும் ( Platform Ticket) பெற்றுக்கொள்ள முடியும்..,
நீங்கள் ஒரு முறை முன் பதிவு செய்துவிட்டு பயணசீட்டை இரத்து செய்ய விரும்பினால் பயணநேரத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் நேரத்தை விட இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே இரத்து செய்துக்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் சென்னை கடற்கரை டூ தாம்பரம் இரயில் நிலையம் வரை ( காலை 10:45 மணிக்கு) டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு அந்த பயணத்தை நீங்கள் இரத்து செய்ய விரும்பினால் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன் அதாவது 8 மணிக்கே இரத்து செய்திருக்கு வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே பயணசீட்டு இரத்தாகி அதற்கான பணம் உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேரும்..
இந்த செயலியை பயன் படுத்தி பயணம் செய்யும் நபர்., எத்தனை பேருக்கு வேண்டும் ஆனால் புக்கிங் செய்துக்கொள்ள முடியும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..