இலவச கல்வி..!! உதவி கரம் நீட்டும் அகரம்..!! படிக்க மறக்காதீங்க..!!
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உணவு, இருப்பிடம், உடை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஒவ்வொருவரும் கல்வி கற்று இருக்க வேண்டும்.., அல்லது ஒரளவிற்கு அடிப்படை அறிவை வளர்த்து கொள்ளும் அளவிற்காவது படிப்பை கற்றிருக்க வேண்டும்..
கல்வி அறிவில் தமிழ்நாடு 8 வது இடத்தில் தற்போது வரை எழுத்தறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை 88.96% சதவிகிதம் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது..
ஒவ்வொரு மாணவர்களும் கல்வி அறிவில் முன்னேற வேண்டும் என்று தமிழக அரசு மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும்.., அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர்களுக்கு உதவி வருகின்றனர்..
அந்த வகையில் நடிகர் சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டது தான் “ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை” இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.., அதன் பின் நடிகர் சூர்யா தொடங்கிய இந்த திட்டம் தான் “அகரம் பவுண்டேஷன்“
பல வருடங்களாக +2 தேர்வில் தேர்ச்சி பெற்று குடும்ப சூழல் காரணமாக படிக்க முடியமால் இருக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகின்றனர்.. நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்..
கடந்த 14 ஆண்டுகளில் 5200 மாணவ மாணவியர்க்கு கல்லூரி கல்வி வாய்ப்பை தமிழகம் முழுவதும் குறிப்பாக கடற்கரை பகுதிகள், மலை கிராம பகுதிகள், அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் என்று பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 30 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தவும், இடை நிற்றலை குறைக்கவும், கிராம மக்களோடு இணைந்து அகரம் குழு பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் சூர்யா ஒருமுறை பேசிய போது.., “மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும்.
அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள்.
ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது” என்று சூர்யா கூறினார்.
தங்களது பகுதிகளில், நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் மாணவ மாணவிகள் என வறுமையின் காரணமாக தொடக்க கல்வி மற்றும் கல்லூரி மற்றும் இதர மேல்படிப்பினை தொடர இயலாத ஏழை குடும்பங்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி கல்வியினை தொடர உதவி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றால் கல்வி கற்க உதவியவன் கடவுள் ஆவான்.
வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 8056134333 அல்லது 9841891000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும். என்று ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதிப்போடும்படியும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..