குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய நஸி குனிங் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..
தேவையானப் பொருட்கள்:
• ¾ கோப்பை (135 கிராம்) வெள்ளை அரிசி
• ½ கோப்பை (70 கிராம்) பழுப்பு அரிசி
• ½ மேசைக்கரண்டி எண்ணெய்
• 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
• 1 தேக்கரண்டி மல்லித்தூள்
• 2 பற்க்கள் வெள்ளைப் பூண்டு
• 1 தேக்கரண்டி மிளகு
• 1 பாண்டான் இலை
• ¼ கோப்பை குறைந்த கொழுப்புள்ள இவாப்பரேட்டட் பால் (Evaporated Milk)
• 2 கோப்பைகள் (500 மில்லிலிட்டர்) தண்ணீர்
• 200 கிராம் நீருடன் பதப்படுத்தப்பட்ட டுனா மீன் சீவல்கள்.
• 1 நறுக்கிய தக்காளி
• 50 கிராம் பச்சைப் பட்டாணி
• 1 மேசைக்கரண்டி உலர்ந்த திராட்சை (தேவைப்பட்டால்)
• 1 மேசைக்கரண்டி பாதாம் பொடி (தேவைப்பட்டால்)
• 2 நன்றாக நறுக்கப்பட்ட எலுமிச்சை இலைகள்
• 2 மேசைக்கரண்டி நறுக்கிய சிராய்
• உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்யும் முறை:
1. அளந்து வைத்துள்ள அரிசியைக் கழுவி, வடிகட்டவும்.
2. ஒரு நான்-ஸ்டிக் பேனில் (non-stick pan) எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அரிசி, மஞ்சள், மல்லி, பூண்டு, சிராய் மற்றும் எலுமிச்சை இலைகளை நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும்.
3. கழுவி வைத்துள்ள அரிசியை ஒரு குக்கருக்கு மாற்றவும். அதில் மிளகு, பாண்டான் இலை, குறைந்த கொழுப்புள்ள இவாப்பரேட்டட் பால் (Evaporated Milk) மற்றும் நீரை ஊற்றவும். பின் மூடியால் மூடாமல் நன்றாக கொதிக்க விடவும்.
4. அனைத்தையும் நன்றாக கலக்கி பின் குக்கரை மூடி, சாதம் வேகும் வரை குறைவான தீயில் வைக்கவும்.
5. சாதம் வெந்ததும் அதில் டுனா மீன், தக்காளி மற்றும் பச்சைப் பட்டாணியை கொட்டி நன்றாக கிளறவும்.
6. பின் சாதத்தில் உலர்ந்த திராட்சை, பாதாம் பொடி, சிராய் மற்றும் எலுமிச்சை இலைகளைக் பயன்படுத்தி அலங்கரிக்கவும்.
7. அவ்ளோதான் சூடாக சாப்பிடலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.