சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைதான முக்கிய நபர்..!! டெல்லியில் தமிழக போலீசார் அதிரடி..!!
பெண் காவலர்களை பற்றி யூடுயூபர் சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் பெண் ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரின் பெயரில் கடந்த மே 4ம் தேதி சைபர் கிரைம் காவல்துறையினர் தேனியில் வைத்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அவதூறு வழக்கு உட்பட 5 வழக்குகள் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது இன்னும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை சென்னை குற்றப்பிரிவு போலீசார் சவுக்கு சங்கரை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதன் பின் எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற முதன்மை நீதிபதி, சவுக்கு சங்கரை வருகின்ற 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
அதற்கிடையில், சவுக்கு சங்கர் நேர்காணல் மூலம் அளித்த வாக்கு மூலங்கள் படியும் நீதிமன்ற அறிவுறுத்தலின் படியும் தனியார் யூடியூப் சேனலை சேர்ந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை கைது செய்வதற்கு முன்னரே, கடந்த 2022-ல் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது பெண்கள் பற்றி இழிவாக பேசியதற்காக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதான வழக்குகளுக்கு அவர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி நிபந்தனையில் வெளியில் வந்தார். தற்போது மீண்டும் பெண்கள் குறித்து தவறாக பேசிய வழக்கில், உயர்நீதிமன்றம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்..
சவுக்கு சங்கரின் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு நேற்றைய முன்தினம் டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றுள்ளார்.., இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு காவல்துறையினர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை நேற்று இரவு 11.30 மணி அளவில் கைது செய்துள்ளனர்.
மேலும் கோவை போலிசார் ஃபெலிக்ஸ் ஜெரால்டோவிற்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் திருச்சிக்கு அழைத்து வர இருப்பதாகவும், அதன் பின் நீதிபதி முன் அஜார் படுத்தி சிறையில் அடைக்க போவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..