நான் திரும்ப வந்துட்டேன்..! சர்வாதிகாரத்து எதிராக இனி..!! அரவிந்த் கெஜ்ரிவால்..!
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகமல் இருந்ததால்.., மார்ச் 21ம் தேதி அமலாக்கதுறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மே 9ம் தேதி வரை நடைபெற்றது அன்றைய தினம் இடைக்கால ஜாமீன் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதி கண்ணா, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
ஒன்றரை ஆண்டுகளாக ஏன் அவரை கைது செய்யவில்லை..? தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த பிறகு கூட கைது செய்திருக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில் அவரை கைது செய்ய என்ன காரணம் என விவாதம் செய்தார். எனவே ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்” என தெரிவித்து ஜாமீன் வழங்கப்பட்டது.
மக்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் :
திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் சிறைக்கு வெளியே கூடியிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், “நான் விரைவில் வருவேன் என உங்களிடம் சொல்லி இருந்தேன் அதுபோல் நான் திரும்பி வந்துவிட்டேன். என்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு நான் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட போகிறேன்.
இப்போது நம்மில் 140 கோடி பேர் அதை செய்ய வேண்டும். இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி. நாளை காலை 11 மணிக்கு, நாம் அனைவரும் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திருக்குச் செல்வோம். பின்னர் மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திக்க இருக்கிறோம். உங்கள் அனைவரையும் ஹனுமான் மந்திருக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..