புகழ் செய்தது தப்பா..? கொந்தளித்த TTF வாசன்..!!
பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் மக்களால் ரசிக்கப்பட்ட குக்-வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு.., கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என சொல்லலாம்.., அதற்கு காரணம் குக்கிங் ஷோவில் கூட காமெடி செய்து மக்களை மகிழ்விக்க முடியும் என செய்த புதிய முயற்ச்சி..
அது மட்டுமா அதில் வரும் கோமாளிகள் செய்யும் காமெடிகள் கூட நம்மை அதிக அளவில் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தது என சொல்லலாம்..,
சீசன் 1 முதல் சீசன் 5 வரை எத்தனை கோமாளிகள் வந்தாலும் ஒரு சில பேருக்கு மட்டுமே தற்போது வரை ரசிகர்கள் உண்டு என சொல்லலாம்..,
ஒரு காமெடியனாக வந்த பாலா தனது கவுண்டர்கள் மற்றும் மற்றவர்களை கலாய்ப்பது மூலம் ரசிகர்களை கவர்ந்தார் அதன் பின் ஒரு சில படங்களில் அவருக்கு துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது என சொல்லாம்..
ஆனால் குக் வித் கோமாளி பாலா என்றாலே பொது உதவிகள் செய்யும் அன்னை தெரேசா என்று தான் அவருக்கு பெயர் உண்டு..,
KPY மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த புகழ் குக் வித் கோமாளி முதல் சீசனில் கோமாளியாக நுழைந்தார்.., அதன் பின் நகைச்சுவை உணர்வுகள் மூலம் மக்களை சிரிக்க வைத்தார். அதிலும் அவர் கொடுக்கும் எக்ஸ் – பிரஷன்கள் எல்லாம் மற்றவர்களை வெகுவாக கவர்ந்தது.
சீசன்-1 முதல் சீசன்-4 வரை ஒரு உழைப்பாளி கோமாளி மற்றும் நகைச்சுவை மூலம் மற்றவர்களை ரசிக்க வைத்த கோமாளி என்ற பெயரை எடுத்தார், அதன் பின் அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தது.. என சொல்லலாம்.
1947 என்ற படத்தில் கடைசியில் ஊமையாக நடித்த ஒரு உணர்வு பூரமாண நடிப்பை வெளிப்படுத்தி அதன் பின் MR.ZOO KEEPPER என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.., விரைவில் அந்த படமும் திரையில் வெளியாக உள்ளது..
ஒரு காமெடியனாக சின்னத்திரையில் கால் பதித்த புகழ் தனது கடின உழைப்பின் மூலம் ஹீரோ என்ற அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி CWC-5 நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.., அதில் யுடியூபர் TTF.வாசனின் காதலி ஷாலின் ஜோயா இதில் குக் ஆக பங்கேற்றுள்ளார்.
இரண்டு வாரங்களை கடந்த குக் வித் கோமாளியில் சர்ச்சையை கிளப்பும் விதமாக TTF வாசன் புகழ் மீது புகார் அளித்துள்ளார். அதாவது ஷாலின் ஜோயா வின் கையை தொட்டு பேசுவது மற்றும் கன்னத்தை பிடித்து கிள்ளுவது என புகழ் தன் காதலியிடம் எல்லை மீறுவதாக TTF.வாசன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதற்கு புகழ் ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.., “காதலியின் கைய தொட்டு பேசுவது பிடிக்க வில்லை என்றால் நீ இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி இருக்க கூடாது என்றும்.,
காதலித்த பெண்ணை சந்தேகப்படுகிறான் என்றும்.., கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர், மேலும் ஷாலின் ஜோயா ஓவர் ஆக்டிங் செய்வதாகவும் அவர் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் எழுத்துள்ளது.., அதே சமயம் புகழ் கடந்த நான்கு சீசன்களில் எப்படி இயல்பாக நடந்து கொண்டாரோ அதே போல தான் இந்த சீசனிலும் நடந்துக்கொள்கிறார்.
அவருடைய நடிப்பு மாறவில்லை என்றும் புகழ்-ற்கு ஆதரவாக இணையத்தில் பல்வேறு பதிவுகள் பதிவிட்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..