இளநரை முடியை கருமையாக்க எளிய வழி..!! அதிசயம்..!!
தலைமுடியை பெரும்பாலான பெண்கள் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பார்கள்.
இருந்தாலும் அவர்களுக்கு தலைமுடி உதிர்வு, அடர்த்தி குறைவு, நரைமுடி பிரச்சினை, நீண்ட வளர்ச்சி இன்மை இளநரை ஆகிய தீரா பிரச்சனைகளுக்கு ஆளாகிருப்பார்கள், அப்படி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இந்த வேம்பாளம் பட்டை எண்ணெய் இருக்கிறது.
அவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய வேம்பாளம் பட்டை எண்ணெய் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..
ஒரு அடி கனமான வாணலில் வெட்டிவேர், வெந்தயம், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை டபுள் பாயிலிங் மெத்தடில் சூடுசெய்ய வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அது கொதிக்க ஆரம்பித்ததும் அதில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள கலவையை அப்படியே உள்ளே வைத்து சூடுபடுத்த வேண்டும்.
பின் இந்த தேங்காய் எண்ணெய் கலவை சூடானதும் கீழே இறக்கிவைத்து அதில் வேம்பாளம் பட்டை மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து இரவு முழுக்க அப்படியே வைக்க வேண்டும்.
பின் மறுநாள் ஒரு பாட்டலில் ஊற்றி வைத்து பின் அதனை உபயோகிக்கலாம். எண்ணெய் காட்டன் பஞ்சில் நனைத்து முடியின் வேர்கால்களில் நன்றாக படும்படி மசாஜ் செய்து பின் ஒரு 2 மணி நேரம் தலையில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நன்றாக அலசிக்கொள்ளவும்.
இந்த எண்ணெய்யை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு உபயோகித்து வர நல்ல பலனைக் காணலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.