இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளியீடு..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!! 2019 டூ 2024..?
கமல்ஹாசனின் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. இதன் முதல் பாகம் 1996ல் கமல்ஹாசனின் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கூறினார்.
கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் மற்றும் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் ஆகியோர் நடிகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.
ஆனால் 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத உயிரிழப்பு இதைத்தொடர்ந்து கொரோனா ஊரடங்கு, ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு இந்தியன்2 மீண்டும் தொடங்குமா இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் :
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் மீண்டும் இந்தியன் 2 படத்தை படப்பிடிப்பை துவங்கினார். 2022 ஆம் ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது..
தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையில் ஒரு பாடல் மட்டும் உள்ளதாம். பாடலையும் விரைவில் முடித்துவிட்டு படத்தின் புரோமஷன் பணியில் படக்குழு ஈடுப்பட உள்ளதாம்.
ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதன்படி இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது கமலின் திரைப்படவாழ்க்கையிலேயே அதிக நாட்கள் ப்ரொடக்ஷனில் இருந்த ஒரே படம் என்ற சாதனையை இந்தியன் 2 படைத்துள்ளது. ஆமாங்க 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வருகின்றது.
கமலின் திரைப்படம் ஐந்து வருடமாக ப்ரொடக்ஷனில் இருப்பது இதுவே முதல்முறையாம். கமலுக்கு மட்டுமல்லாமல் சங்கருக்கும் இதுவே முதல்முறையாம். பல போராட்டங்களை கடந்த இந்தியன் 2 மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..