திருப்பூரில் கொட்டி தீர்க்கும் கனமழை..!! குறிப்பிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!!
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது அவ்வப்பொழுது லேசான மழை இருந்து வந்தது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் திருப்பூரில் 17ம் தேதி கனமழை பெய்யும் எனவும் அதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் மதியத்திற்கு மேல் கருமேகங்கள் சர்ந்து இடியுடன் கூடிய கனமழையானது பெய்யத் தொடங்கியது.
திருப்பூர் மாநகரை சுற்றியுள்ள பெருமாநல்லூர் சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை மங்கலம் சாலை, என பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக சாலைகளில் மழைநீரானது கரைபுரண்டு ஓடியது இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
அதுமட்டுமின்றி இந்த கனமழை காரணமாக சாலையோர கடைகளில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது இதனால் அங்கு வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலில் தாக்கம் குறைந்து திருப்பூர் மாநகர் பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.
எனவே திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறிப்பாக பெருமாநல்லூர் சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை மங்கலம் சாலை, உட்பட்ட பகுதிகளுக்கு வானிலை ஆய்வுமையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது..
-லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..