நட்பில் தொடங்கிய எங்கள் காதல்..!
நீங்களும் நடிப்பின் மூலம் காதல் செய்தவர்களா..? தமிழ் சினிமாவில் எத்தனை காதல் திரைப்படங்கள் வந்தாலும் சில திரைப்படங்கள் நம் வாழ்க்கையோடு சேர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் முதலில் நண்பர்ககளாக இருந்து பின்பு காதலர்களாக மாறும் திரைப்படத்தில் வரும் பாடலில் உங்களுக்கு பிடித்த பாடல் எது..?
நான் உன்னுடன் இருக்கும் பொழுது என்னுடைய சோகம் எல்லாம் மறந்து காற்றில் பறப்பதுபோல் உணர்கிறேன், ஏன் கால்கள் போகும் போக்கில் நான் போகிறேன். உன்கண்கள் பார்க்கும் பொழுது இத்தனை உணர்வுகளை எனக்கு கொடுக்கிறாய். என் தோழியாக இருக்கும் உன்னை காதலியாக பார்க்க தோன்றிவிட்டேன். என்று கூறும் வகையில் இருப்பது தான் இந்த பாடல் . பாடலாசிரியர் தனுஷ் எழுத இசையமைப்பாளர் அனிருத் இசையில் தனுஷே பாடும் பாடல்தான் இது.
என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்
காற்றில் போக பார்க்கிறேன்
கால்கள் போன பாதை எல்லாம்
நான் போகிறேன்..,
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே..,
நம் இருவரும் ஒன்றாக இருக்குபோது பழகும் போதும் எனக்கு அந்த வித்தியாசம் தோன்றவில்லை அனால் ஏனோ தெரியவில்லை. இப்போதெல்லாம் முன்னாடி உன் கூட பழகுனா யாவும் என் நெஞ்சில் வருகிறது.
நூல் இல்லாத பட்டம் போல் அவளை சுற்றி திரிகிறேன். நீ எப்பொழுது என்னை பிடிப்பாய் என்று. இதற்கு என்ன அர்த்தம் என்று நீ எனக்கு சொல்ல வேண்டும் கேட்கப்போகிறேன் இந்த பாடலை இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல்.
அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்..
காதல் உதடு வழியாக சொல்லுவதில்லை கண்கள் வழியாக சொல்லுவதுதான் தலைவா பெண்கள் எல்லாரும் கவிதைகள் அல்ல நீ மட்டும்தான் எனக்கு கவிதையாக தெரிகிறாய் என் சகியே இருவரும் வரிகளில் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருப்பதுதான் இந்த பாடல் . பாடலாசிரியர் பழனி பாரதி எழுத ரமணா கோகுலா இசையில் ஸ்ரீனிவாஸ் , சுனிதா உபத்ராஷ்டா இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது .
அடடடடா…
இன்னும் என் நெஞ்சம் புரியலையா…
காதல் மழையா…
இது என்னடி…
இதயம் வெளியேறி அலைகின்றதே…
காதல் இதுவா…
எந்த பொன்னும் காதல் வந்ததும் அவனிடம் போய் சொல்லுவதில்லை அவளுடைய மூளைக்குள் மறைத்து வைத்திருப்பாள் , நீ என் வீட்டிற்கு வந்து போனால் உன் கொலுசின் ஓசை என் வீட்டில் கேட்டுக்கும் என்றும் கூறுகிறான் காதலன் .
நீ வந்து போனால்
என் தோட்டம் எங்கும் உன்
சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்
நீ வந்து போனால்
என் வீடு எங்கும் உன்
கொலுசின் ஓசை கேட்கும்
நாளெல்லாம்..
இதில் உங்கள் காதல் எந்த வகையில் சேரும் என்று சிந்தித்து பாருங்கள்..?
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..