காதல் என்பது ஒரு மாயமான உலகம்..!! இவரின் வரிகளில் உள்ள மேஜிக்..!
இவரு பாட்டு கேட்டாலே தனி பீலிங் தான் சொல்லமுடியும் அந்த அளவுக்கு இவருடைய வாய்ஸ் இருக்குனு சொல்லலாம் காதல் பாடல்களிகளே பலவித வெறியசனில் தந்திருப்பார். இவருடைய வாய்ஸ் மாதிரியே இவரும் ஸ்வீட்னு சொல்லலாம் இவர் பாடிய பாடல்களின் சிலவற்றை பார்ப்போம் .
தன் காதலிக்கு இருக்கும் பிரச்சனையில் இருந்து வெளிய வருவதற்க்கு ஹீரோ அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்வார் அப்பொழுது ஹீரோ கூறுகிறார். நீ இப்பொழுது எங்க வீட்டில் இருக்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியல அதனால் இது கனவா இல்லை நிஜமா என்று எனக்கு தெரியவில்லை.
அதனால் என்னை கிள்ளி பார்க்கின்றேன் காதலியே இந்த பாடலை “தாமரை” எழுத, இசையமைப்பாளர் “தர்புகா சிவா” இசையில் “சித் ஶ்ரீராம் ” மற்றும் “ஷாஷா திருப்பதி” இருவரும் சேர்ந்து பாடிய பாடல்.
யார் யாரோ கனாக்களில்…
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்…
நீ காணும் கனாக்களில் வரும்…
ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்…
ன்னை பார்க்காத நான் பேசாத நான்…
என் வாழ்வில் நீ நான் என்று நான்…
காதல் என்பது ஒரு மாயமான உலகினில் வாழ்வது போல் இருக்கும் அந்த காதலில் சிக்கத்தவர்கள் யாருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் உடன் சேராமல் போய் இருந்தாலும் ஒரு நிமிடம் உன்னை நினைத்து பார்த்தால் போதும். அது எல்லாம் மறந்து போயிருவேன் இதனை மாற்றங்கள் வருமா ஒரு காதல் வந்த என்று ஒரு கலக்கலான பாடலை எழுதியவர் “விக்னேஷ் சிவன்” இசைமைப்பாளர் “அனிருத் ரவிசந்தர்” இசையமைக்க “சித் ஸ்ரீராம்” & அனிருத் ரவிசந்தர் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது.
அடக் காதல் என்பது…
மாயவலை…
சிக்காமல் போனவன் யாருமில்லை…
சிதையாமல் வாழும் வாழ்க்கையே…
தேவையில்லை…
நீ என் நெஞ்சில் சாயும் பொழுது எனக்கு எதோ மாயம் மாதிரி தெரிகிறது, சரக்கு அடிக்காமலே எனக்கு போதையாகி தள்ளாடி போய் விழுகிறேன் என் அன்பே. என் இதயத்தில் அரசியாக அமைந்திருக்கிறாய். உடம்பில் ஓடும் குருதிகூட நீயாக மாறிவிட்டாய் என் காதலியே, நிரஞ்ஜன் பாரதி எழுத இந்த பாடலை , யுவன் சங்கர் ராஜா இசையமைக்க “சித் ஸ்ரீராம்” பாடிய பாடல் இது.
ஹே.. பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே..,
ஒரு நாளைக்கு ஆயிரம் முறை உன்னை பார்த்து ரசித்தாலும், இந்த மனம் இன்னும் உன்னை பார்க்க சொல்லி எங்கும் என் காதல் மனைவியே, கணவன் மனைவியை எப்படி தங்குவான் என்பதை மிகவும் அழகிய வரிகளில் தந்திருப்பார் பாடகர் “விவேகா” எழுத இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் சித் ஶ்ரீராம் பாடிய பாடல் இது.
தினமும் ஆயிரம் முறை…
பார்த்து முடித்தாலும்…
இன்னும் பார்த்திட சொல்லி…
பாழும் மனம் ஏங்கும்…
தாரமே தாரமே வா…
வாழ்வின் வாசமே வாசமே…
நீ என் அருகில் இருக்கும் பொழுது என் கைபேசி பார்க்காமல் உன்னை ரசித்து கொண்டு இருப்பேன். என் காதலியே நீ தலைசாய்த்து சிரிக்கும் பொழுது நான் குடிக்கும் தேனீர் கூட தேன் குடிப்பது போல இருக்கிறது. என கூறுகிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத அருண் ராஜ் இசையில் சித் ஶ்ரீராம் & பத்மலதா இருவரும் சேர்ந்து பாடிய பாடல் .
அருகே நீ இருந்தால்…
என் கைப்பேசி வாய் மூடுமே…
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்…
என் தேனீரில் தேன் கூடுமே…
இவர் காதல் பாடல்களில் மட்டும் இல்லாமல் பசப்பிணைப்பிகளுக்கு அழகிய பாடல்களை பாடியவர் இவர் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது..?
தன் அழகிய குரலால் அனைவரையும் ரசிக்க வைத்துக்கொண்டிருக்கும் சித் ஸ்ரீராம் அவர்களுக்கு மதிமுகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..