யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டிடம் போலீசார் அதிரடி விசாரணை..!
பெண் போலீசாரை கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை தொடர்ந்து “யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு” கைது செய்யப்பட்டார். அதன் பின் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய கோவை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று கோவை 4-வது ஜூடிசியில் நடைபெற்றது.
அதற்காக பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சியில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி சரவண பாபு, யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு விடம் ஒருநாள் மட்டும் விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பெயரில் காவல்துறையினர் பெலிக்ஸ் ஜெரால்டு தனி இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சவுக்கு சங்கர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பெலிக்ஸ் ஜெரால்டு கொடுத்த பதில்களை வாக்கு மூலமாக காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். மேலும் இன்று மாலை 4 மணிக்கு பெலிக்ஸ் ஜெரால்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..