கவலைகள் தீர்க்கும் தயாள ரூபம்.. மகாபெரியவர் சொன்னது..?
அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்து இந்த அகிலத்துக்கே ஒளியாகத் திகழ்ந்தவர் காஞ்சி மகா பெரியவர். லோக குருவான தட்சிணா மூர்த்தியே மனித வடிவம் எடுத்துவந்ததுபோன்ற தோற்றம். காணும் கணத்திலேயே கவலைகள் தீர்க்கும் தயாள ரூபம்.
“ஆசி வழங்க அவரின் கரங்கள் உயர்ந்த போதெல்லாம், நம் வாழ்க்கை ஒரு படி உயர்ந்தது” என்று பக்தர்கள் போற்றிய பரமன்.
1894-ல் விழுப்புரத்தில் அவதரித்த அந்த ஞான சூரியனுக்கு “சுவாமி நாதன்” என்ற பெயரிட்டுப் பெற்றோர் வளர்த்தனர். இளமையிலேயே ஆன்மிக நாட்டமும் ஞானத் தேட்டமுமாய் வளர்ந்த அந்தப் பாலகனை “மடாதிபதி” பொறுப்பு தேடிவந்தது.
ஈஸ்வர சித்தம் அது என்பதை உணர்ந்த அவரும் அதை ஏற்றுத் தன் வாழ்வை மத சேவைக்காய் அர்ப்பணித்தார். மக்களில் பேதம் பாராது உழைத்த அந்த மாமுனி, லட்சக்கணக்கானவர்களை நல்வழிப்படுத்தினார். எளிமையை அணிகலனாய்ப் பூண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் அருள் செய்த அந்த மகானின் வாழ்க்கைச் சரிதம் கேட்கக் கேட்கத் திகட்டாதது.
அவரோடு பேசியவர்களும், பழகியவர்களும், பக்தி செய்தவர்களும் அவர் குறித்துப் பகிர்ந்து கொள்ளும் போதே கேட்பவர்களின் கண்களில் நீர் கசியும். நூறாண்டுகள் வாழ்ந்து மறைந்த அந்த மகான், தற்போதும் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் அமைந்துள்ள அதிஷ்டானத்தில் சூட்சுமமாய் இருந்து அருள்பாலிக்கிறார்.
-வீர பெருமாள் வீர விநாயகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..