கோவை கார் வெடிப்பு குறித்தான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. இச்சம்பத்தில் ஈடுபட்டு இறந்த முபீன் குறித்தும் மற்றும் அவருடன் இருந்த 5 பேரை காவல் துறை விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே முபீன் என்ஐஏ-வின் விசாரணை வளையத்தில் இருந்துள்ளார் என்பதும் தெரிவந்துள்ளது.
கோவையில் நடந்த கார் வெடிப்பு குறித்தான விசாரணை அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவருக்கு பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், என்ஐஏ முதலில் அண்ணாமலையை தான் விசாரிக்க வேண்டும் விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பே அவருக்கு எப்படி இது குறித்தான தகவல்கள் கிடைத்தது, மேலும் இந்த சம்பம் குய்த்தான தகவல்களை அண்ணாமலைக்கு கொடுத்தது யார்? என்றும்,
மேலும் முதல்வரின் உத்தரவின் படி போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றனர். குற்றம் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யபட்டுள்ளனர் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.