கொடநாடு கொலை வழக்கு..! வெளியான ஆதரங்கள்..! எடப்பாடிக்கு எதிராக ஸ்டாலின் எடுத்த பிரம்மாஸ்திரம்..!
நாடாளுமன்ற தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றோடு தேர்தல் பிரச்சாரங்களும் ஓய்ந்து விட்டது. நாளை மறுநாள் 7ம் கட்ட தேர்தல் நடை பெற உள்ள நிலையில் திமுக தற்போது கொடநாடு விவகாரம் பற்றி கையில் எடுத்துள்ளது. இது அதிமுகவினர் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம்.
எடப்பாடி பழனிசாமி மீது புகார் :
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது அதிக புகார்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது திமுக அந்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது என சொல்லப்படுகிறது. இதில் இத்தனை காலம் எடப்பாடிக்கு எதிராக திமுக கொஞ்சம் கரிசனை காட்டியதாம்.
அதிமுகவை காலி செய்தால்.. பாஜக உள்ளே வரும் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது பாஜக ஆட்சியும் தோல்வி அடையும் நிலையில் இருப்பதால். எடப்பாடியை வீழ்த்த திமுக முடிவு செய்துள்ளதாம்.
2026 சட்டசபை தேர்தலுக்கு முன் இந்த கொடநாடு வழக்கு பல வருடங்களாக நிலுவையில் உள்ள நிலையில் ஜூன் 4க்கு பின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது என சொல்லலாம்.
மறைந்த தலைவர் ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன்பின் கொள்ளையில் சாட்சிக்காரர்கள் பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டனர் . இந்த கொடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு சிறப்புப்படை காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் சில மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் மர்மமான் முறையில் கொல்லப்பட்டார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மற்றொரு குற்றவாளி சயான் ஒரு விபத்தில் நூல்இழையில் உயிர் தப்பியதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி மீது நேரடி குற்றச்சாட்டு :
அதன் பின் சயான் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டினார். அதாவது எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பின் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் அளித்த பரபரப்பு பேட்டிதான் தற்போது பேசும் பொருள் ஆகியுள்ளது என சொல்லலாம். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது கொடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார். அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தது. எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் எடுத்து வந்ததாக என்னிடம் கூறினான்.
எனது தம்பி விபத்தில் உயிரிழக்கவில்லை அது திட்டமிட்ட கொலை.., எனவே எடப்பாடி பழனிசாமியை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும். என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பேட்டி அளித்துள்ளார்.,
எனவே எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது அடுத்தடுத்து புகார்களும் அவருக்கு எதிரான ஆதாரங்களும் கிடைத்தாலும் சிபிசிஐடி முக்கியமான சில போன் கால் ரெக்கார்டுகளை எடுத்துள்ளனர்.
அதன்படி கொள்ளை நடந்த நாளில் மேற்கொள்ளப்பட்ட போன், அதில் சயான் உள்ளிட்டோர் மேற்கொண்ட ரெக்கார்டிங் ஆகியவற்றை சிபிசிஐடி கைப்பற்றி உள்ளது. மேலும் சில முக்கியமான பல ஆவணங்கள், மற்றும் தகவல்களை சிபிசிஐடி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் பிரம்மாஸ்திரம் :
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் முக்கியமான கட்டத்தை சிபிசிஐடி நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் ஆத்தூரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள சிபிசிஐடி அதிகாரிகள் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஜெயலலிதா கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..