வன்மத்தை கக்கும் மோடி..! துரைமுருகன் ஆவேசம்..!
காந்தியின் மீதுள்ள வன்மத்தையே பிரதமர் மோடியின் பேச்சு வெளிக்காட்டுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு பிரதமர் மோடியின் செய்கை உள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.
காந்தியின் மீதுள்ள வன்மத்தையே பிரதமர் மோடியின் பேச்சு வெளிக்காட்டுகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா பேசுவது வெட்டி வீர வசனம். முல்லை பெரியாறாக இருந்தாலும், காவிரியாக இருந்தாலும் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது என்றும் கூறினார்.
மேகதாது அணையை அவர்கள் கட்டுகிறேன் என்று சொல்வார்கள் திட்டவட்டமாக கட்ட முடியாது என நான் சொல்லுகிறேன்.
தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்கள் மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது இதற்கு திட்டவட்டமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.
இவர்கள் கட்டுவதென்றால் பல தடைகளை கடக்க வேண்டும் ஐந்து குழுக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் அந்தக் குழுக்கள் இதற்கு அனுமதி தர முடியாது என்று தான் சொல்லுவார்கள்.
இது ஒரு அரசியல் அந்த மாநிலத்தில் எப்போதெல்லாம் அரசியல் கிளம்புகிறதோ அப்போதெல்லாம் இது குறித்து இது போல் பேசுவார்கள்.
தேர்தலில் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்று குறித்த கேள்விக்கு எல்லா கட்சியினரும் அவர்கள் வெற்றி பெறுவோம் என்று தான் கூறுவார்கள் முடிவை எண்ணி பார்த்தால் தான் தெரியும் என்று கூறினார்.
-ஜெய்முருகன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..