மலைப்பாதையில் பாதுகாப்பாக வண்டி ஓட்ட சில டிப்ஸ் உங்களுக்காக..!
இந்த கோடை மற்றும் பள்ளி விடுமுறை உள்ள நாட்களில் நகர்புறத்தில் வசிப்பவர்கள் தங்களின் விடுமுறை நாட்களை கழிக்க மற்றும் இயற்கை அழகை காண, வளைந்து நெலிந்த பாதைகள் மற்றும் குளிர் நிறைந்த மலைகளை நோக்கிச் செல்வது வழக்கம் தான். ஆனால் அப்படி பயணிக்கும் பாதை சிறப்பாக அமைய நாம் வாகனம் ஓட்டும் போது சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ADVERTISEMENT
என்னென்ன பின்பற்ற வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
-
நமக்கு முன்னே செல்லும் வாகனத்தை முந்திக் கொண்டு செல்லக் கூடாது.
-
மலைப்பகுதி மிகவும் ஆபத்தானது எனவே மெதுவாக வாகனத்தை ஓட்ட வேண்டும்.
-
மலைப்பகுதியில் ஏறும்போது சாரியான கியரில் வாகனத்தை ஓட்ட வேண்டும்.
-
மலைகளில் கால் பெடல்களை பயன்படுத்துவதை விட எஞ்சின் பிரேக்கிங் மிகவும் பயனுள்ளது.
-
மலையில் இருந்து கீழே இறங்கும்போது உங்கள் வாகனம் முதல் மற்றும் இரண்டாம் கியரில் ஓட்ட வேண்டும்.
-
வாகனம் ஓட்டும் போது பாதி கிளட்சை பிடித்துக் கொண்டு கியரை மாற்றக்கூடாது. இது சேதத்தை உண்டாக்கும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
