மக்களை தேர்தல் குறித்து முகவர்களுக்கு ஆலோசனை..! அந்த முக்கிய கருத்து..?
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் கானொளி காட்சி வாயிலாக தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், வாக்கு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்பட்டால்
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி மறு வாக்குப்பதிவு கோறுவதற்கான வழிமுறைகள், வாக்கு எண்ணிக்கையை சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோவன்,
திமுக செய்திதொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் கானொளி காட்சி வாயிலாக ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து எம்எல்ஏ நிவேதா முருகன் முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-பவானிகார்த்திக்