ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய டி20 உலககோப்பை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலபரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்து பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. இதைதொடர்ந்து பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணி ஆட்டம் தொடங்கிய முதலே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. பந்துவீசிய இங்கிலாந்து அணி அணைத்து பந்து வீச்சாளர்களும் தங்களுக்கு அளிக்கபட்ட வேலையே கச்சிதமாக செய்து முடித்தனர். குறிப்பாக ஆதில் ரசித் மற்றும் இளம் வீரர் சாம் கர்ரன் மிக சிறப்பாக பந்துவீசினார் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டும் கொடுத்து 3 பெரிய விக்கெட்களை எடுத்து ஆட்டத்தை திருப்பினார். இதனால் பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
உலககோப்பையை வெல்ல 138 ரன்கள் எடுத்தால் போதும் என்று பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் அற்புதமான பந்துவீச்சால் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது கணிசமான இடைவெளியில் விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். 17 ஒவேர்கள் வரை தன் பந்துவீச்சால் அணியை தாங்கி பிடித்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பேன் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்த தவறியது மீண்டும் இறுதிப்போட்டியில் அசத்தலாக ஆடிய பேன் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை கோப்பைக்கு அருகில் கொண்டு சென்று பேட்டிங்கில் பேன் ஸ்டோக்ஸ் 52(49) ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இதன்மூலம் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதனை தொடர்ந்து ஆட்டநாயன் மற்றும் தொடர் நாயகன் விருது இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் வென்றார். இந்த உலக கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்தும் இறுதிபோட்டியில் அசத்தலான பந்துவீச்சாலும் அவருக்கு இந்த விருதுகள் கொடுக்கபட்டுள்ளது.