பாஜகவை பின் தள்ளிய நோட்டா..!! இவ்வளவு ஓட்டா..!!
18வது மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பெருவாரியான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் வக்களிக்க விரும்பாத பட்சத்தில் அவர்களின் தேர்வாக நோட்டா இருக்கும். அப்படி குறிப்பிட்ட ஒரு தொகுதியில் நோட்டா வெற்றி பெறும் பட்சத்தில் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் வேட்பாளர் வெற்றி வேட்பாளராக கருதப்படுவார்.
இந்நிலையில், நடப்பு மக்களவை தேர்தலில் நாட்டிலேயே இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு அளவுக்கு அதிகமான வாக்குகள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தூர் மக்களவை தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பீகார் மாநிலத்தின் கோபல்கஞ்ச் தொகுதியில் அதிகளவில் நோட்டாவுக்கு வாக்குகள் பதிவானதே சாதனையாக காணப்பட்ட நிலையில், தற்போதை அந்த சாதனையை இந்தூர் மக்களவை தொகுதி முறியடித்துள்ளது என சொல்லலாம்.
இந்நிலையில், நடப்பு மக்களவை தேர்தலில் இந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. நோட்டாவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டாலும், அவை செல்லாத வாக்குகளாக கருதப்படுவதால் அவை தேர்தல் நடைமுறையின் முடிவை மாற்ற முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..