இண்டியா அலைன்ஸ் திருப்பம்..! நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவிடம் சரத் பவார் பேச்சு வார்த்தை..!
18வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1, 2024 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 16 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) உடனடியாக அமலுக்கு வந்தது.
மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படுவதால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் போன்ற பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் சரத் பவார் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியா கூட்டணி கட்சிக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு தெரிவிக்குமா என அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வருகிறது.
நமது நாட்டைப் பொறுத்தவரை மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் ஜெயிக்கும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். பாஜக தற்போதைய சூழலில் 240+ தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது.
சரத் பவார் நிதிஷை தொடர்பு கொண்டு பேசினாரா?
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவரான சரத் பவார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்தியா பிளாக் தலைவர் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் நான் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசவில்லை என தெரிவித்திருக்கிறார்.
-பவானிகார்த்திக்