வைகோ அவர்களுடன் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் சந்திப்பு
இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்கள் இன்று (14.11.2022) பகல் ஒரு மணிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, உதகையில் உள்ள தேயிலை தோட்டங்களிலிருந்து மலையகத் தமிழர்கள் வெளியேற்றப்படும் அபாயம் தலைக்குமேல் கத்திபோல் தொங்குவதைச் சுட்டிக் காட்டி, அவர்களுக்கு பாதுகாப்பு தரவும், புனர்வாழ்வு அமைக்கவும் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
அந்த வேண்டுகோளை நிறைவேற்றித் தருவதாக வைகோ உறுதி அளித்தார்.