திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெட்டிக்கடையில் படுஜோராக மதுபானம் வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோட்டூர் அருகே மழவராய நல்லூர் ஊராட்சி தட்டாங்கோவில் கிராமத்தில் இயங்கி வரும் பெட்டிக்கடையில் 24 மணி நேரமும் மது வியாபாரம் நடைபெற்று வருவதாக தொடர்த்து குற்றசாட்டு எழுந்து வந்தது .
அப்பகுதியில் பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவிகள் அதிகமா பயன்படுத்தி வரும் வழி என்பதால் பெரிமளவு இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கோட்டூர் காவல் ஆய்வாளருக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர்.
ஆனால் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடையில் நடக்கும் மதுபான விற்பனையை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த விடியோ வைரலாகியது இதை தொடர்ந்து பெட்டிக்கடை நடத்திய லாரன்ஸ் மற்றும் அவரது மனைவி நட்சத்திர மேரி ஆகியோர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .