சனிதோசம் நீங்க இந்த மந்திரம் சொன்னால் போதும்..!
சனிபகவான் என்பவர் நம் வாழ்வில் பிடித்திருக்கும் சனியை நீக்க கூடியவர்.., அவரை வணங்கமும் ஒரு முறை இருக்கிறது அதே போல் நம் வாழ்வில் சனி நீங்கவும் சில மந்திரங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.
சனிபகவான் கோவிலுக்கு சென்று வணங்கும் பொழுது, சன்னதிக்கு இடது அல்லது வலது புறத்தில் இருந்து தான் வணங்க வேண்டும்.
சனிபகவானின் நேருக்கு நேர் நின்று வணங்ககூடாது, அதே போல் சனிபகவான் கோவிலில் தரும் திருநீறையும் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வரக்கூடாது. இரண்டுமே நாம் சனிபகவானை வீட்டிற்க்கு அழைப்பதற்கு சமமாகும்.
ஆனால் சனிபகவான் கோவிலின் வடது அல்லது இடது புறத்தில் நின்று வழிபடும் பொழுது மற்றும் அங்கேயே திருநீர் நெற்றியில் இட்டு சென்றால், நம்மை பிடித்த சனி விலகி விடுமாம். திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரை ஒரு முறை சென்று வணங்கினால் சனிதோஷம் தீருமாம்..
பன்னிரு ராசி கட்கும்
பாரினில் நன்மை கிட்ட,
எண்ணிய எண்ணம் எல்லாம்.
ஈடேறிய வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத்துதித்தேன்..!
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே..!
கருப்பினில் ஆடை ஏற்றாய்..!
காகத்தில் ஏறி நின்றாய்..!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில்பிரியம் வைத்தாய்..!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்..!
பெரும் பொருள் வழங்கும்
ஈசா பேரருள் தருக நீயே
சனியெனும் கிழமை கொண்டாய்..!
சங்கடம் விலக வைப்பாய்!
அணிதிகழ் அனுஷம், பூசம்.
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீனாகும்..!
எழில்நீலா மனைவி யாவாள்..!
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்
குளிகனை மகனாய் பெற்றார்..!
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்..!
விழிபார்த்து பிடித்து கொள்வாய்..!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்..!
துணையாகி அருளைத்தாராய்..!
அன்னதானத்தில் மீது அளவிலா
பிரியம் வைத்த மன்னனே..!
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..