மொறுமொறு முளைக்கீரை தோசை…காலை உணவு!
வறுத்த ரவை-250 கிராம்
மைதா-125 கிராம்
சீரகம்-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
இஞ்சி-சிறிதளவு
சின்ன வெங்காயம்-பொடியாக நறுக்கியது
இரண்டு டம்ளர்-தண்ணீர்
அவல்- ஒரு பிடி
முளைக்கீரை அரை கட்டு-200கிராம்
நெய்-சிறிதளவு
பச்சை மிளகாய்-4 நறுக்கியது.
முதலில் கீரையை நன்றாக கழுவி பின் குக்கரில் உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொண்டு அதனை அரைத்துக் கொள்ள வேண்டும்.
ரவை, மைதாவை சலித்து சுத்தம் செய்த பின் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
மாவுடன் இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சீரகம் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அரைத்த கீரையும் மாவில் கலந்து தோசை ஊற்றி நெய் விட்டு இரண்டு பக்கமும் சுட்டு எடுக்க வேண்டும்.