டுடே ஸ்நாக் இனிப்பு சீடை…
பச்சரிசி மாவு-1 கப்.
வெள்ளை எள்-1 தேக்கரண்டி.
தேங்காய்-1 கப்.
உளுத்தம் பருப்பு மாவு-1 கப்.
நெய்-1 தேக்கரண்டி.
வெல்லம்-1 கப்.
ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.
உப்பு-1 சிட்டிகை.
எண்ணெய்- தேவையான அளவு.
ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சரிசி மாவு, வறுத்த வெள்ளை எள், தேங்காய், வறுத்த உளுத்தம் பருப்பு மாவு மற்றும் நெய் கலந்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை போட்டு சூடுப்படுத்தி கரைந்ததும் அதில் ஏலக்காய்ப்பொடி, உப்பு சிறிது போட்டு பின் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
வெல்லத்தில் சிறிது சிறிதாக மாவை போட்டு நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு உருட்டிக் கொள்ள வேண்டும்.
அந்த மாவை அப்படியே அரை மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவு தான் சுவையான இனிப்பு சீடை தயார்.