ஓரிண சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தும் பெண்…. மறுத்ததால் கொலை மிரட்டல்…!
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி, பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இவருக்கும், இவரது எதிர் வீட்டில் வசிக்கும், 26 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தையடுத்து, இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், 20 வயது கல்லூரி மாணவி, காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் கூறினார். அதாவது, தனது எதிர் வீட்டில் வசிக்கும் 26 வயது பெண், தன்னுடன் ஓரிண சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி வந்தார்.
அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும், நான் குளிக்கும்போது, வீடியோ எடுத்து, அதனை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் அந்த பெண் மிரட்டி வருகிறார்.
எனவே, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, அந்த பெண் காவல்துறையில் கூறியுள்ளார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும், நீதிபதி முன்பு, அந்த பெண் கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து, மனநல மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அயனாவரம் பகுதியில் உள்ள மனநல மருத்துவமனையில் அந்த பெண்ணும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
-பவானி கார்த்திக்