அரிசிப்பொரியில் இருக்கும் நன்மைகள்…!
அரிசி பொரி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பொருள்.
அரிசிப் பொரியில் வெல்லப்பாகை கலந்து உருண்டைகளாக பிடித்து சாப்பிடுவது ஒரு ஸ்நாக் ஆகும்.
வீட்டில் நல்ல நாட்களில் சாமிக்கு படையல் போடும்போது இலைகளில் வைக்கப்படும் உணவுப்பொருட்களில் இதுவும் ஒன்று.
அரிசிப்பொரி என்பது குறைந்த கலோரிகள் நிறைந்த ஒரு ஸ்நாக் ஆகும்.
உடல் எடையை குறைக்க விரும்புவோர்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த உணவு பொருளாக அரிசிப்பொரி இருக்கிறது.
வயிற்றுக்கு எந்தவொரு சிக்கலையும் தராமல் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவுப்பொருள் அரிசிப்பொரி.
அரிசிப்பொரியுடன் சிறிது கல்லை மற்றும் நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடும்போது உடலுக்கு இரும்புச்சத்து, புரோட்டீன் மேலும் பல சத்துக்கள் கிடைக்கிறது.
அரிசிப்பொரியின் விலையும் குறைவு, எல்லா இடங்களிலும் கிடைக்ககூடிய உணவுப்பொருளும் கூட, இதனை கொலஸ்ட்ரால் உள்ளவர்களும் பாதுகாப்பாக சாப்பிடலாம்.
அனைத்து தரப்பினரும் வாங்கி உண்ணக்கூடிய ஒரு உணவுப்பொருள். இதனை மிக்ஸர் போன்ற கார வகை உணவு பொருட்களிலும் சேர்த்திருப்பார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு உணவுப் பொருளாகும்.