“ST சாதி சான்றிதழ் வேண்டும்” – மனு கொடுத்த மலையாள மலைவாழ் மக்கள்..!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா பர்கூர் மலைப்பகுதி மற்றும் சத்தியமங்கலம் தாலுக்கா கடம்பூர் மலைப்பகுதி மலையாளி இன மக்களுக்கு
பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வேண்டுதல் தொடர்பாக . தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 357980 மலையாளி இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா பர்கூர் மலைப்பகுதி மற்றும் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் 31,200 மலையாளி இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மலையாளி இன மக்கள் 1976 ஆம் ஆண்டு அரசு ஆணைப்படி வட ஆற்காடு தென் ஆற்காடு திருச்சி சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற மலையாளி இன மக்கள் பழங்குடியினர்(ST) இனத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை மற்றும் கடம்பூர் மலையில் வாழ்கின்ற மலையாளி மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்கள்.
கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி மலையாளி மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்துள்ளோம்.
கடம்பூர் பர்கூர் மலைப்பகுதியில் வாழ்கின்ற மலையாளி இன மக்கள் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மற்றும் சேலம் மாவட்டம் பால மலையில் வாழ்கின்ற மலையாளி மக்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று ஊட்டி மலையக ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை பெறப்பட்டு இப்பகுதி மக்களையும் பழங்குடியினர் என பட்டியலில் சேர்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பெரியார் மாவட்டமாக இருந்த பொழுது பெரியார் மாவட்டத்தில் உள்ள மலையாளி மக்களை பழங்குடியினர் இனத்தில் சேர்க்கலாம் என்று 5-4-1990 தேதியில் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதேபோல் கடந்த, 8-9-2023 தேதியில் மதிப்புக்குரிய தமிழக அரசினுடைய செயலாளர் மத்திய அரசினுடைய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்திலும் 30 -1 -2024 அனுப்பிய கடிதத்திலும் அந்தியூர் தாலுகா பர்கூர் மலை மற்றும் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலையாளி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கலாம் என பரிந்துரைத்துள்ளனர்.
ஏழ்மை நிலையில் உள்ள இப்பகுதி மலையாளி மக்களுக்கு பழங்குடியினர் இனச் சான்றிதழ் இல்லாததால் மாணவர்கள் கல்வி பயில்வதிலும் வேலை வாய்ப்பு பெறுவதிலும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பெருமதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பர்கூர் மலை மற்றும் கடம்பூர் மலைப்பகுதி மலையாளி மக்களுக்கு இந்து மலையாளி பழங்குடியினர் என ஜாதி சான்றிதழ் வழங்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளானர்.
-பவானி கார்த்திக்