அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு..! உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீனை டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கி விட்டதால், எங்களது மனு தானாகவே காலாவதி ஆகி விட்டது.
எனவே அதனை திரும்பப்பெற நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ஆனால் இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் பி.வி.ராஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கெஜ்ரிவால் தரப்பு திரும்பப்பெற அனுமதி வழங்கப்படுகிறது.
இறுதி தீர்ப்புக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டு, முன்னதாக தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
– வெ.லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..