பள்ளி சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கதறும் உறவினர்கள்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு 11 வயதில் கனிஷ்கா என்ற மகள் இருந்தார். சிறுமி கனிஷ்கா புதுப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார்.
கனிஷ்காவிற்கு சிறுவயது முதலே இதய பிரச்சினை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற கனிஷ்கா வகுப்பறையில் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக ஆசிரியர்கள் கனிஷ்காவை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு கனிஷ்காவைப் பரிசோதித்த மருத்துவர்கள் கனிஷ்கா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் கனிஷ்காவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்