அரசியல் கலந்த பேச்சு..! மேடையில் மாஸ் காட்டிய தளபதி விஜய்..!
https://www.youtube.com/live/bcUvJp8nthw?si=HgIC3hO_X5uWTaLD
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு “கல்வி விருது விழா” இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. முதல் இடம் பிடித்த 750 மாணவர்கள் உட்பட 3500-க்கும் மேற்பட்டோர், இதில் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாணவருக்கும் அவர் கையாலேயே சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி 5000 ரூபாய் ஊக்கத்தொகையை ஆகியவற்றை வழங்கி பாராட்டி வருகிறார்.
இதில் முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மீதமுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி கல்வி விருதுகள் விழா நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே 10 லிருந்து 15 நிமிடங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது..
எல்லாத்துறைகளும் நல்ல துறைதான்… நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டால் மட்டுமே 100% வெற்றி நிச்சயம்.. அதனால் உங்களுக்கு பிடித்த துறையை நீங்களே தேர்ந்தெடுங்கள்…
அரசியலும் ஒரு துறை தான் அதையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.. படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நீங்கள் கல்வி பயிலும் போதே அரசியலில் ஈடுபட வேண்டும். தினமும் நியூஸ் பேப்பர் படித்தாலே அது உங்களுக்கு புரியும் என மேடையில் பேசிய அவரின் பேச்சு அரங்கையே அதிர வைத்தது..
– லோகேஸ்வரி.வெ