முயல் ரத்த எண்ணெய் கூந்தலுக்கு பயன்படுத்தலாமா..?
முடி உதிர்வு என்பது இங்கு ஆண் பெண் என பலருக்கும் காணப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சமையாகும்.
ஆனால் இப்போ இந்த கூந்தல் உதிர்வுக்கு பலரும் முயல் ரத்தத்தில் உருவான எண்ணெய் பயன்படுத்தி வருகிறார்கள், இப்போது பார்க்கலாம் அப்படி அந்த முயல் ரத்த எண்ணெயில் என்ன இருக்கிறது என்று.
இந்த முயல் ரத்த எண்ணெய் பயன்படுத்துவதால் கண்களில் ஏற்ப்படும் எரிச்சல் குணமாகும், கண் பார்வையும் தெளிவாகும்.
முயல் ரத்தமானது உடலில் இருக்கும் சூட்டை தணிக்கிறது. இதனால் உடல் சூட்டினால் உருவாகும் முடி உதிர்வை சரிச்செய்கிறது.
முடி ஆரோக்கியமாக வளர லைசின், மெத்தியோனின், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள் அவசியமானது, அத்தகைய அமிலங்கள் முயல் ரத்தத்தில் இயற்கையாகவே இருக்கின்றன. இது முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.
நரை முடி பிரச்சனையை தீர்க்க முயல் ரத்த எண்ணெய் பயன்படுத்தலாம்.
மேலும் தலையில் இருக்கும் பொடுகை அழித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
முடி வெடித்தல், முடியின் வேர்க்கால்களை பலப்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
கூந்தல் பளப்பளப்பாக மின்னுவதற்கு முயல் ரத்தத்தால் செய்யப்பட்ட எண்ணெயை முடிக்கு தடவி வரலாம்.
