ஒரு விநாயகர் சிலை இவ்வளவு விலையா..?
தருமபுரியில் கண்களை கவரும் வகையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம். வருகிற செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, தருமபுரி மாவட்டத்தில், பழைய தருமபுரி, தருமபுரி, அதியமான்கோட்டை, ஒட்டப்பட்டி ஆகிய பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த, இரு மாதங்களாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக சிலை தயாரிப்பாளர்கள் 1 அடி முதல் 15 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் பசுவின் மீதும், காளையின் தலை மீது அமர்ந்தவாறு உள்ளிட்ட பல்வேறு விதங்களில், வாடிக்கையாளர்களின் கண்ணை கவரும் வகையில் பலவகை வண்ணங்களை தீட்டி சிலைகளை அலங்கரித்து வருகின்றனர்.
ஒரு சிலை 500 முதல் சுமார் 25000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட முன்பதிவுகளுக்கான விநாயகர் சிலைகளை, வியாபாரிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், பல்வேறு வடிவம், வண்ணங்களை கொண்டு கண்ணை கவரும் வகையில் இருக்கும் இந்த சிலைகளை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். இதனால் சிலைகள் விற்பனையும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..