விளையாட சென்ற 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..! பரிதவிக்கும் பெற்றோர்..!
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த குக்கலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், கவிதா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இளைய மகன் பரத்ராஜ் 8 வயது குக்கல பள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று விடுமுறை நாள் என்பதால் தனது தந்தையுடன் குக்கலபள்ளி கொள்ளை மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேர்க்கடலை விளைவிப்பதற்காக டிராக்டர் மூலம் உழுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரை அழைத்துள்ளார்.
அவர் அவருடைய டிராக்டரை கொண்டு வந்து நிலத்தில் உழுவதற்காக நிறுத்தி வைத்திருந்தபோது பரத்ராஜ் டிராக்டரின் பின்புறம் உள்ள ரோலர் மீது ஏறி நின்று உள்ளார் அப்போது ஆதி கேசவன் டிராக்டரை நிலத்தில் உழுவதற்காக எடுத்தபோது நிலை தடுமாறி பாரத் ராஜ் கீழே விழுந்து உள்ளார்.
அப்போது டிராக்டர் ரோலரில் சிக்கி தந்தையின் கண் முன்னே உடல் நசுங்கி உயிரிழந்திருக்கிறார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பரத் ராஜா மீட்க முயற்சித்த உள்ளனர் ஆனால் பாரத் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் குறித்து லத்தேரி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையின் கண் முன்னே மகன் டிராக்டரின் ரோலரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..