இன்னிக்கு ஈசியா ரவா பொங்கல் வீட்ல செய்ங்க…
பாசிப்பருப்பு-1/4 கப்.
நெய்- தேவையான அளவு.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதறவு.
இஞ்சி-1 துண்டு.
முந்திரி-10.
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
ரவை-1/2 கப்
ஒரு குக்கரில் பாசிப்பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் ஜீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி, கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து கிளறி விட்டு பின் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு பின் ரவையை போட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பின் அனைத்தும் வெந்து ஒன்று திரண்டு வரும்போது நெய் 4 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
அவ்ளோதான் சுவையான ரவா பொங்கல் தயார்.