காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலாய் எத்ரிக்கொள்ளவும் இந்த யாத்திரை நடைபெறுகிறது இதற்கு இந்தியா ஒற்றுமை யாத்திரை என்று பெயரிடப்பட்டு கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மஹாராச்டிரா மாநிலங்களில் யாத்திரையை முடித்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் 12 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதும் இதை 380 கிமீ தூரம் நடக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் செல்லும் இடமெல்லாம் அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் சாலை முழுவதும் நின்று அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர். மேலும் இந்த பாத யாத்திரை மக்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்று வரும் நிலையில் இன்று ராகுல் காந்தியுடன் அவரின் தங்கை மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாத யாத்திரையில் பங்கேற்றார். மேலும், பிரியங்கா காந்தியுடன் அவரின் கணவர் மற்றும் அவர்களின் குழந்தைகளும் பங்கேற்றனர்.