வேலூர் ரவுடி கொலை வழக்கில் சிக்கிய 5 பேர்..! வெளிவந்த உண்மை காரணம்..!
வேலூர் பல்வேறு கொலை கொள்ளை ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ராஜா (வயது 43) அரியூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். நேற்று ஒரு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி இரவு வீட்டிற்கு செல்லும் வழியில தனது இருசக்கர வாகனத்துடன் அரியூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது.
காரில் வந்த சில மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து… உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் அருகில் உள்ள கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், அந்த மர்ம நபர்கள் அரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு (வயது 23), அஜித் குமார் (வயது22), ராஜேஷ் (வயது 23), தேஜஸ் (வயது 22), கார்த்திகேயன் (வயது25) என்பது தெரியவந்தது.
அதன் பின் இவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தேஜாஸின் உறவினர் காமேஷ் (வயது 29) என்பவரை கடந்த 9.12.2020 தேதி எம்எல்ஏ ராஜா கொலை செய்த முன் விரோதம் காரணமாக வெட்டியதாக தெரியவந்துள்ளது.
இறந்த ராஜா மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..